Click here

Your Ad Here

Wednesday, 9 January 2013

விவேகானந்தரின் பொன் மொழிகள்!!!


"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!" 

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை


கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்!


முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம்.ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாம். சில மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும் பற்றி கீழே காண்போம்.



அருகம்புல் : 
மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்
ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு
தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு
நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்
நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்
முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்
வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்
அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்
வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்
நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்
நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்
சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்
திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு
அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்
சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு
ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்
வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்
வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்
ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்
செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்
ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்
முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)
திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்
திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்
வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்
கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்
கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம் கருந்துளசி :இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்
கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்
காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்
கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வெளி


விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு "உண்மை வரலாறுகள் (True Histories)" என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.

அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி பற்றிக் குறிப்பிடத் தகுந்த நூல் எதுவும் வெளி வரவில்லை. இருப்பினும், நிலவைப் பற்றியும், விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் புதிர்களைப் பற்றியும் விளங்கிக் கொள்ள மக்கள் முயன்றே வந்துள்ளனர்.

நிக்கலஸ் கோபர்நிகஸ் என்ற போலந்து நாட்டு வானியல் வல்லுநர் தன்னுடைய ஆய்வுகளின் முடிவில், இந்த அண்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், இப்புவி ஒரு கோள் என்றும் கூறினார். இத்தாலி நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ 1610-ல் ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன் வாயிலாக விண்வெளியையும், நிலவின் மேற்பரப்பையும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.

நிலவைப் பற்றியும், பிற கோள்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளைக் கலிலியோ கண்டறிந்து வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் மக்களால் வரவேற்கப்படவில்லை. எனினும், ஒரு சில அறிஞர்கள் மட்டும் அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அப்போது முதலே விண்வெளிப் பயணம் பற்றிய முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் எனலாம்.

வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். முதலாவது வழியில், தெய்வீக சக்தி ஒன்று மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லக் கூடும். இரண்டாவது, ஆற்றல் மிக்க மிகப் பெரிய பறவைகள் துணையுடன் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்ததாக மிகப் பெரிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு மனிதனே நிலவிற்குப் பறந்து செல்லலாம். நான்காவதாக, பறக்கும் எந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து, அதில் அமர்ந்து நிலவுக்குச் செல்லலாம். இவையே அவர் கூறிய 4 வழிகள்.
பின்னர் ஐசக் நியூட்டன் விண்வெளி பற்றிப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அவரது இயக்க விதிகள் (laws of motion) புதியதோர் அறிவியல் சிந்தனையை உலகிற்கு அளித்தது. புவியை விட்டு உயரே செல்லச் செல்ல, புவியின் ஈர்ப்பு விசை குறைந்து கொண்டே போகும் என்பதை அவர் நிரூபித்தார். மேலும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், விண்மீன்கள் முதற்கொண்டு சின்னஞ் சிறு துகள்கள் வரை அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உடையவை என்றும், அக்கவர்ச்சி விசையே ஈர்ப்பு விசை எனவும் நிரூபித்தார்.

விண்வெளிப் பயணத்தில் நியூட்டனின் ஈர்ப்புவிசை விதிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்விதியின் அடிப்படையிலேயே, புவியின் கவர்ச்சி விசையிலிருந்து விண்வெளி ஓடத்தின் தப்பித்தல் திசை வேகம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், நியூட்டன் கண்டுபிடித்த மூன்று இயக்க விதிகளும் விண்வெளிப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சுமார் 475 ஆண்டுகட்கு முன்பு வான்-ஹூ என்ற சீனர் நெருப்பு ஏவுகணை (fire rocket) ஒன்றைத் தயாரித்தார். நாற்காலி வடிவ ஊர்தி ஒன்றில் 47 ஏவுகணைகளில் வெடிப் பொருளை நிரப்பி அது உருவாக்கப்பட்டது. இதன் மீது அமர்ந்து கொண்டு விண்வெளியில் பறக்க இயலும் என அவர் நம்பினார். ஆனால் ஏவுகணைகளில் தீப்பற்றியவுடனே, அவர் உயரே தூக்கி எறியப்பட்டு, அதே வேகத்தில் தரையில் விழுந்து உயிர் இழந்தார்.

வான்-ஹூ அவர்களின் ஆய்வு தோல்வியில் முடிந்தாலும், அறிவியல் அறிஞர்கள் விண்வெளிப் பயணத்திற்குத் தகுதியான ஊர்தியைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. வில்லியம் காங்கிரேவ் என்ற இங்கிலாந்து நாட்டுப் போர்ப்படை அதிகாரி 1808ஆம் ஆண்டு துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்கத் துவங்கினார். இத்தகைய ஏவுகணைகள் கடற் சண்டையில் பெரும் வெற்றியை ஈட்டித்தரும் என்று அவர் நம்பினார். அவர் கண்டுபிடித்த இவ்வகை ஏவுகணைகள் 1812-ல் அமெரிக்காவுடன் நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டன.

ஏவுகணையைப் பயன்படுத்தி அண்டவெளியை ஆய்வு செய்வது பற்றிய நூல் ஒன்றை கான்ஸ்டான்லின் சிலோவ்ஸ்கி என்ற இரஷ்ய நாட்டு அறிஞர் 1898-ல் எழுதி வெளியிட்டார். விண்வெளிப் பயணத்திற்குப் புதியதோர் துவக்கமாக இந்நூல் விளங்கியது.

அமெரிக்க-ஜெர்மன் நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து திரவ எரிபொருளைப் பயன்படுத்திச் செலுத்தும் ஏவுகணைகளை 1920-ல் உருவாக்கினர். முன்பு சொல்லப்பட்ட இரஷ்ய விஞ்ஞானியும் திரவ எரிபொருளைப் பற்றிக் கூறி இருந்தார். ஆயினும் அப்போது அவர் கருத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.ஏவுகணை வடிவமைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கோடர்ட் என்பவரும் முக்கிய பங்காற்றினார். அவரது முயற்சியால் துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணை உருவாக்கப்பட்டது. மேலும் திரவ எரிபொருளால் இயங்கும் ஏவுகணையிலும் அவர் ஆர்வம் காட்டினார். திட எரிபொருளை விட, திரவ எரிபொருள் அதிக ஆற்றல் வழங்குவதாக அவர் கண்டறிந்தார்.

கோடர்ட் பயன்படுத்திய திரவ எரிபொருளானது, பெட்ரோலில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட கேசொலின் (Gasoline) ஆகும். இந்த கேசொலினை எரிக்கத் திரவ உயிர்வளி (oxygen) பயன் படுத்தப்பட்டது. வளிம நிலையிலுள்ள உயிர்வளியானது அழுத்தத்தினால் குளிர்விக்கப்பெற்று திரவ நிலைக்கு மாற்றப்பட்டது. இதனை "லாக்ஸ் (lox)" எனக் கூறினர்.

திரவ எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட முதலாவது சோதனை ஏவுகணையை கோடர்ட் 1926-ல் செலுத்தினார். ஆனால் அந்த ஏவுகணை அதிக உயரம் செல்லவில்லை. எனினும் 1929-ல் மேலும் ஒரு ஏவுகணை அவரால் செலுத்தப்பட்டது. அது சுமார் 90 அடி உயரம் விண்ணில் சென்று, கட்டுப்பாடு குறைவு காரணமாகத் தரையில் விழுந்துவிட்டது. சுழலாழிக் கருவியைப் (gyroscope) பயன் படுத்தி இந்தப் பிரச்சினையையும் கோடர்ட் தீர்த்து வைத்தார். சுழலாழிக் கருவி என்பது விரைந்து சுழலும் ஒரு சக்கரம்; இச்சக்கரத்தின் அச்சு ஒரு குறிப்பிட்ட திசையில் எளிதாகத் திரும்பக் கூடியது.

கோடர்ட் செலுத்திய இறுதி ஏவுகணை, மணிக்கு 550 கி.மீ. வேகத்தில், விண்வெளியில் சுமார் 1.25 மைல் தூரம் சென்றது. இரண்டாம் உலகப் போரின் போது அவர் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார். குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களை மிகச் சிறிய இடத்திலிருந்து விண்ணுக்குச் செலுத்தக் கூடிய துணை உந்து கலங்களையும் கோடர்ட் வடிவமைத்தார். மேலும் அவர் வி-1, வி-2 என்ற ஏவுகணைகளைப் போரில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியில் உருவாக்கினார். இவற்றின் முன்னேறிய வடிவங்களே எதிர்காலத்தில் விண்வெளி ஓடங்களாக உருவெடுத்தன.

வார்னர் வான் பிரான் (Warner Von Braun) என்ற ஜெர்மன் நாட்டு ஏவுகணைப் பொறியாளர் இரண்டாம் உலகப் போரின் போது தமது நாட்டை விட்டு அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அவர் விண்வெளி ஆய்வுக் குழுவுக்குப் பொறுப்பேற்றார். அவர் தலைமையில்தான் எக்ஸ்ப்ளோரர்-1 என்ற துணைக்கோள் (Satellite) வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. அடுத்து அவரது மேற்பார்வையில் சாட்டர்ன் (Saturn) ஏவுகணையும் தயாரிக்கப்பட்டது. முதல் முறையாக புவியிலிருந்து நிலவிற்கு மனிதர்களைக் கொண்டு செல்ல இதுவே பின்னர் பயன்படுத்தப்பட்டது. சிறு வயது முதலே வெர்னர் பிரான் விண்வெளியின் வியத்தகுக் காட்சிகளைக் காண்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவரது தாயாரும் சிறு தொலைநோக்கி ஒன்றை மகனுக்கு அளித்து அவரது ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்தார். பின்னாளில் வெர்னர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக வளர்ந்தார்.

சோவியத் யூனியன் 1957 அக்டோபர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைத் துணைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது. உலகம் முழுதும் இச்செயலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தது எனலாம். இச்செயற்கைத் துணைக்கோள் சிறியதொரு நிலவை ஒத்திருந்ததோடு, புவியை 90 நிமிடங்களில் சுற்றி வந்தது. புவியிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இந்தச் செயற்கைத் துணைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்து 1958 ஜனவரி 31-ல் அமெரிக்கா எக்ஸ்ப்ளோரர்-1 என்ற தனது துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மாறி மாறி துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தின. விண்வெளிக் கண்டுபிடிப்புகள் பலவற்றில் ஈடுபட்டு நிலவுக்குச் செல்லும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டன.

சோவியத் யூனியன் ஸ்புட்னிக்-1ஐத் தொடர்ந்து மற்றொரு விண்வெளிக்கலமான ஸ்புட்னிக்-II-ஐச் செலுத்தியது. அதில் லைகா என்ற பெயர் கொண்ட பெண் நாய் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாரம், பல இன்னல்கள் நிறைந்த விண்வெளிச் சூழ்நிலையில் அந்த நாய் இருந்து உயிர் வாழ்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனவே விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதலாவது உயிரினம் என்ற பெருமை லைகா என்ற அந்தப் பெண் நாய்க்குக் கிடைத்தது.

விண்வெளிப் பயணத்தின் திருப்பு முனையாக, 1969 ஜூலையில், மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் குறிப்பிடலாம். அமெரிக்கா அனுப்பிய விண்வெளிக்கலமான அப்பலோ-II, நெயில் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் இ ஆல்ட்வின் ஆகிய இரு விண்வெளிப் பயணிகளுடன் 1969 ஜூலை 20-ல் நிலவில் சென்று இறங்கியது.

பின்னர் பல துணைக்கோள்கள் பல்வேறு நாடுகளால் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு முக்கிய தகவல்களை ஒளிப்படங்களாக அனுப்பி வைத்தன. அப்படங்களின் அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளின் வரை படங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் வானொலி, தொலைக்காட்சி ஆகிய தகவல் தொடர்பு அமைப்புகளில் துணைக்கோள் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை விளைவித்தது. முக்கியமாக நான்கு வகையான துணைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை 1) கூர்ந்து நோக்கித் தகவல் திரட்டும் துணைக் கோள்கள், 2) தட்பவெப்பம் அறிவிக்கும் துணைக்கோள்கள், 3) தகவல் தொடர்புத் துணைக்கோள்கள், 4) பிறகோள்கள், விண்மீன்கள் பற்றிய தகவல்களைத் தந்து வழிகாட்டும் துணைக்கோள்கள் என்பனவாம்

புவியில் உள்ள பல இடங்களைப் பற்றிய சரியான தகவல்களையும், படங்களையும் அனுப்பி இதுவரை புரியாத புதிராக இருந்த பலவற்றிற்கு முதல் வகைத் துணைக்கோள்கள் விடையளித்தன. புவியிலுள்ள காடுகள், மலைகள், எரிமலைகள், கனிம வளங்கள், பனிப்பகுதிகள் ஆகியன பற்றிய பல விவரங்களை இவ்வகைத் துணைக்கோள்கள் அனுப்பி வைத்தன.

தட்பவெப்பத் துணைக்கோள்கள் அனுப்பும் தகவல்கள் வாயிலாகப் புயல், நிலநடுக்கம், பெருமழை, சூறாவளி பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிய முடிவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிகிறது.

அடுத்த வகைத் துணைக்கோள்களால் தகவல் தொடர்பு அமைப்பில் பெரும் புரட்சியே விளைந்துள்ளது. ஒரே ஒரு துணைக்கோளின் வாயிலாக பல ஆயிரம் தொலை பேசிகளைச் செயற்படுத்த முடிகிறது. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உலகின் எந்த மூலையிலும் ஒலி/ஒளி பரப்பச் செய்ய முடியும். அடுத்து, சில சிறப்பு வகைத் துணைக்கோள்களைப் பயன்படுத்திப் பிற கோள்களின் விவரங்களைப் பெற இயலும்.

பொது அறிவு கேள்வி - பதில்கள்



1. பசுமைப் புரட்சியுடன் தொடர்புடைய விஞ்ஞானி?
அ) குரானா ஆ) எம்.எஸ்.சுவாமிநாதன்
இ) எஸ்.சந்திரசேகர் ஈ) தேசிகாச்சாரி

2. சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1965 ஆ) 1975
இ) 1985 ஈ) 1995

3. ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது?
அ) நியூயார்க் ஆ) லண்டன்
இ) கெய்ரோ ஈ) ரோம்

4. "குழந்தைக் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர்?
அ) கண்ணதாசன் ஆ) தேசிக விநாயகம் பிள்ளை
இ) அழ வள்ளியப்பா ஈ) பாரதியார்

5. உலகிலேயே மிகப்பெரிய தீவு?
அ) கிரீன்லாந்து ஆ) பிரிட்டன்
இ) மடகாஸ்கர் ஈ) நியூகினியா

6. ஜெர்மன் நாட்டு நாணயத்தின் பெயர்?
அ) யென் ஆ) ரியால்
இ) மார்க் ஈ) குரோனர்

7. தமிழகத்தில் "அக்மார்க்' தர நிறுவனம் அமைந்துள்ள இடம்?
அ) கோவை ஆ) திருச்சி
இ) மதுரை ஈ) விருதுநகர்

8. வானமும் பூமியும் சந்திக்கும் இடம்?
அ) தொடுவானம் ஆ) தென்துருவம்
இ) வடதுருவம் ஈ) கடல்

9. தொழிற்புரட்சி எந்த நாட்டில் முதன்முதலில் ஏற்பட்டது?
அ) அமெரிக்கா ஆ) பிரிட்டன்
இ) ரஷ்யா ஈ) பிரான்ஸ்

10. இந்தியாவின் பழமை வாய்ந்த மருத்துவ முறை?
அ) யுனானி ஆ) ஓமியோபதி
இ) அலோபதி ஈ) ஆயுர்வேதம்

11. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?
அ) பேஸ்பால் ஆ) பேட்மின்டன்
இ) கால்பந்து ஈ) கிரிக்கெட்

12. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி?
அ) ஜி.எஸ்.பதக் ஆ) பதஞ்சலி சாஸ்திரி
இ) ராஜேந்திர பிரசாத் ஈ) ஹரிலால் கானியா

13. திருப்பாவை பாடல்களை பாடியவர்?
அ) நம்மாழ்வார் ஆ) ஆண்டாள்
இ) திருமூலர் ஈ) மாணிக்க வாசகர்

14. விவசாயிகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) டிசம்பர் 4 ஆ) டிசம்பர் 11
இ) டிசம்பர் 22 ஈ) டிசம்பர் 23

15. சைக்கிளை கண்டுபிடித்தவர் யார்?
அ) செல்சியஸ் ஆ) எடிசன்
இ) மாக்மில்லன் ஈ) பாஸ்கல்

விடைகள்:
1.(ஆ) 2.(இ) 3.(ஈ) 4.(இ) 5.(அ) 6.(இ) 7.(ஈ) 8.(அ) 9.(ஆ) 10.(ஈ) 11.(அ) 12.(ஈ) 13.(ஆ) 14.(ஈ) 15.(இ)  

பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் என் மகள் அடுத்ததாக எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாமா? அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா? எது சிறந்தது?



பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு எம்.சி.ஏ. செல்வதே பொதுவாக நல்ல வாய்ப்புகளைத் தருவதாக இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்கள் எம்.எஸ்சியை விட எம்.சி.ஏ. படித்திருப்பவரைத் தான் விரும்புகின்றன. எனினும் வெறும் எம்.சி.ஏ. மட்டுமே இன்றைய சூழலுக்குப் பொருந்துவதில்லை.


வெப் டெவலப்மென்ட் படிப்புகளான ஜாவா, ஆரக்கிள், வி.பி.நெட்., சி#, ஏஎஸ்பி.நெட். போன்றவற்றில் சிலவற்றை எம்.சி.ஏ. படிக்கும் போதே உங்களது மகள் படிக்கலாம். இது சாப்ட்வேர் டெவலப்மென்ட் துறைக்குச் செல்ல அவருக்கு உதவும். நெட்வொர்க்கிங் துறைக்குச் செல்ல அவர் விரும்பினால் அதற்கேற்ப எம்.சி.எஸ்.இ., சி.சி.என்.ஏ. போன்றவற்றில் சிறப்புப் பயிற்சியைப் பெறலாம். பணியில் சேர்ந்து சில ஆண்டுகளில் அவர் ஐ.டி. முக்கியப் பாடமாகக் கொண்டு எம்.பி.ஏ. படிப்பையும் மேற்கொள்ளலாம். இது இப்போது தொலை தூர முறையில் கிடைக்கத் துவங்கியுள்ளது.

இந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள்


இயற்கையும் நாட்டின் பாதுகாப்பும் அழைத்தவுடன் உடனே வந்து நிற்பது ராணுவத்தினர் தான் அல்லவா? தியாகத்தையும் சேவையையும் அடக்கியுள்ள மகத்தான தேசத் தொண்டு புரியும் வாய்ப்பை ராணுவப் பணி வாய்ப்புகள் தான் தருகின்றன. ஆனால் தற்போது இந்திய ராணுவத்தில், குறிப்பாக இந்திய தரைப்படையில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக சமீபத்தில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் தரைப்படை எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
தரைப்படையில் ஒருவர் 2 வழிகளில் அதிகாரியாகப் பணியில் சேரலாம். முதலாவது நிரந்தர கமிஷன். தரைப்படையில் சேரும் ஒருவர் ரிடையர் ஆகும் வரை பணி புரிவதை இது குறிக்கிறது. இப்படி நிரந்தரப் பணியில் சேர என்.டி.ஏ., ஐ.எம்.ஏ., ஓ.டி.ஏ. ஆகியவற்றின் மூலமாக மட்டுமே ஒருவர் சேர முடியும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்தடுத்த பதவி உயர்வைப் பெறலாம். 2 ஆண்டுப் பணியின் பின் லெப்டினன்டாகவும், 4 ஆண்டுப் பணிக்குப் பின் கேப்டனாகவும், 13 ஆண்டுப் பணிக்குப் பின் மேஜராக பதவி உயர்வுகளைப் பெறலாம். தங்குமிடம், உணவு, கிளப் மெம்பர்ஷிப், மானியத்தோடு கூடிய உயர் கல்வி வாய்ப்பு என உலகத் தரத்தில் தரைப்படை அதிகாரிகள் பணிக்குப் பிந்தைய பணிச் சூழலைப் பெறுகிறார்கள்.
2ம் வழியான குறுகிய கால கமிஷன் பணிவாய்ப்பும் தரைப்படையில் இருக்கிறது. இதன்படி ஒருவர் 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்
- பணியிலிருந்து விலகலாம்
- பணியை நீட்டித்துக் கொள்ளலாம். அதன் பின் எப்போது வேண்டுமானாலும் பணி விலகலாம்.
- நிரந்தர கமிஷன் பணிக்கும் மாறிக் கொள்ளலாம்.
ஓ.டி.ஏவில் பயிற்சிக்குப் பின் குறுகிய கால கமிஷன் பணியில் ஒருவர் சேரலாம். இப்படி அதிகாரியாக நுழைவது தவிர பிற பணி நிலைகளிலும் ஒருவர் தரைப்படைப் பணியில் சேர முடியும். பெரும்பாலான தரைப்படை வாய்ப்புகள் சாதாரண சிப்பாய் மற்றும் சோல்ஜர் நிலை வாய்ப்புகளாகவே இருக்கின்றன. இவற்றுக்கு ரேலி எனப்படும் முறையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். டெக்னிகல் சோல்ஜர், சாதாரண சோல்ஜர், கிளார்க், ஸ்டோர்கீப்பர், நர்சிங் அசிஸ்டன்ட் ஆகிய பணிகளுக்கு 10ம் வகுப்பு தகுதி இருந்தால் போதும்.
நல்ல உடற்தகுதிகளைப் பெற்றிருப்பவர் இது போன்ற வாய்ப்புகளுக்குத் தவறாது விண்ணப்பித்தால் மிகச் சிறந்த வாய்ப்பையும் மன திருப்தியையும் கட்டாயம் பெற முடியும். தரைப்படையும் சரி ராணுவத்தின் பிற பிரிவுகளும் சரி இப்போது இது போன்ற இளைஞர்களை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

பேக்கேஜிங் துறையில் கிராஜுவேட் டிப்ளமோ படிப்பு


மும்பை: இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பேக்கேஜிங், 1 வருட கிராஜுவேட் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

சேரும் தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனுமொரு பல்கலையில் பட்டப் படிப்பு முடித்து, 1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள், இதில் சேர தகுதியானவர்கள்.
இந்தாண்டு ஜனவரி 1 முதல் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கின்றன.
கல்விக் கட்டணம் - ரூ.40,000 (சர்வீஸ் கட்டணமும் உண்டு).
சான்றிதழ் - ஆசியன் பேக்கேஜிங் பெடரேஷன் அங்கீகாரத்துடன், "Graduate Diploma in Packaging" என்ற பெயரில் சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவு - பதிவுப் படிவம், விவரணம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை, ரூ.100ஐ பணமாகவோ அல்லது டிடி.,யாகவோ செலுத்தி (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பேக்கேஜிங் என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும்) பெற்றுக் கொள்ளலாம்.
பயிற்சி வகுப்புகள் மற்றும் இதர பிற விபரங்களை அறிய www.iip-in.com என்ற வலைத்தளம் செல்க.

இந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும்?



கேடட் என்ட்ரி (யு.பி.எஸ்.சி., நடத்தும் என்.டி.ஏ., மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

கேடட் என்ட்ரி (பிளஸ் 2 யு.பி.எஸ்.சி., நடத்தும் நேவல் அகாடமி தேர்வு மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கிராஜுவேட் ஸ்பெஷல் என்ட்ரி (நேவல் அகாடமி, கோவா). சி.டி.எஸ்.இ., தேர்வு மூலமாக சேர்க்கை. 19 முதல் 22 வயதுள்ள பி.எஸ்சி., (இயற்பியல், கணிதம் படித்த) அல்லது பி.இ., முடித்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி நேவல் அகாடமி, கோவா. 19 முதல் 24 வயதுள்ள ஆண்கள் மட்டும். பி.எஸ்சி., இயற்பியல் கணிதம் படித்த அல்லது பி.இ., முடித்திருக்கும் என்.சி.சி., சான்றிதழ் பெற்றவர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
டைரக்ட் என்ட்ரி நேவல் ஆமமன்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் பணிகள். பி.இ., எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் முடித்த அல்லது எலக்ட்ரானிக்ஸ் இயற்பியல் இவற்றில் ஒன்றில் பட்ட மேற்படிப்பு முடித்தவர் விண்ணப்பிக்கலாம். வயது 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
டைரக்ட் என்ட்ரி லா கேடர் 22 முதல் 27 வயதுள்ள ஆண்கள் சட்டத்தில் பட்டப்படிப்பு 55 சதவீதத்துடன் முடித்திருக்கவேண்டும்.
லாஜிஸ்டிக்ஸ் கேடர் குறுகிய கால பணிகளுக்கு 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ., பொருளாதாரம் அல்லது பி.காம்., அல்லது பி.எஸ்சி., இயற்பியல் கணிதம் அல்லது பி.இ., பி.டெக்., மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் தகுதி.
ஏடிசி குறுகிய கால பணிகளுக்கு 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., இயற்பியல் அல்லது கணிதம் அல்லது இவற்றில் எம்.எஸ்சி., குறைந்தது 55 சதவீதத்துடன் தேர்ச்சி. இதைத் தவிர கல்விப் பிரிவில் எம்.எஸ்சி., இயற்பியல், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருப்போருக்கும் எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் படித்திருப்போருக்கும் பணிகள் உள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இவற்றில் பி.இ., தகுதி பெற்றவருக்கும் பணியிடங்கள் உள்ளன. 
உங்களது தகுதிக்கேற்ப பணியிடங்களை தேர்வு செய்து அதன் போட்டித் தேர்வுக்காக தயாராக வேண்டும். மேலும் ராணுவ பணிகளுக்கு உடற்திறன் அவசியம் என்பதால் நமது ராணுவ பிரிவுகளின் இன்டர்நெட் தளங்களை பார்வையிட்டு பிற விபரங்களை அறியவும்.

பொது அறிவு கேள்வி - பதில்கள்


1. இந்தியாவில் பொதுப்பணித் துறையை நிறுவியவர் 

அ. வில்லியம் பெண்டிங் ஆ. ராபர்ட் கிளைவ்
இ. சர்ஜான் ஷோர்  ஈ. டல்ஹௌசி
2. எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?அ. மவுலானா அபுல் கலாம் ஆசாத்
ஆ. கான் அப்துல் கபார் கான்
இ. ஜதின் தாஸ் ஈ. முகமது அலி
3. இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் அ. கேரா ஆ. அகமதாபாத்
இ. பர்தோலி ஈ. இம்பரான்
4. எந்த சட்டத்தின் பெரும்பகுதி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது?
அ. 1935 ம் ஆண்டு சட்டம் ஆ. 1891 ம் ஆண்டு சட்டம்
இ. 1909 ம் ஆண்டு சட்டம் ஈ. 1919 ம் ஆண்டு சட்டம்
5. ........ ஐ பரிசீலனை செய்ய வட்டமேஜை மாநாடு கூட்டப்பட்டதுஅ. சைமன் குழு பரிந்துரைகள்
ஆ. டொமினியன் அந்தஸ்து கோரிக்கை
இ. சுதந்திரக் கோரிக்கை
ஈ. இவற்றுள் எதுவுமில்லை
6. 1 கிலோவாட் என்பது 
அ. 1,000 வாட்    ஆ.10,000 வாட்
இ. 100 வாட்   ஈ. இவற்றுள் எதுவுமில்லை
7. உலக வானிலை தினம் அ. மார்ச் 8   ஆ. மார்ச் 23
இ. பிப்ரவரி 28   ஈ. ஜனவரி 6
8. கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர் அ. உமறுப்புலவர்  ஆ. சேக்கிழார்
இ. ஜெயங்கொண்டார்  ஈ. திருமூலர்
9. ஒரு குதிரை திறன் என்பது
அ. 746 வாட்   ஆ. 1000 வாட்
இ. 345 வாட்   ஈ. 10,000 வாட்
10. ராதா மோகன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?அ. போலோ   ஆ. ஹாக்கி
இ. கால்பந்து   ஈ. கிரிக்கெட்
11. சந்தோஷ் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?அ. லான் டென்னிஸ்  ஆ. கிரிக்கெட்
இ. கால்பந்து   ஈ. ஹாக்கி
12. எழுத்தறிவு தினம் 
அ. ஆகஸ்டு 15 ஆ. டிசம்பர் 2
இ. ஜனவரி 30 ஈ. டிசம்பர் 15
13. மலேரியா நோயின் அறிகுறிகள் எவை?அ. உடல் வெப்ப நிலை வேகமாக ஏறுவது தலைவலி, காய்ச்சல்
ஆ. காய்ச்சல், வாந்தி
இ. நிணநீர் சுரப்பிகள் வீங்குதல்
ஈ. நரம்புகளில் தடிப்பு, அரிப்பு
14. தொழுநோய் உடலில் முக்கியமாக எப்பகுதியை தாக்குகிறது?அ. ரத்த ஓட்ட மண்டலம்  ஆ. மேல் தோல் நரம்புகள்
இ. பரிவு நரம்புகள்  ஈ. கழிவுநீக்கு மண்டலம்
15. மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு அழைக்கிறோம்?
அ. டெமோகிராபி    ஆ. மக்கட் தொகை உயிரியல்
இ. மக்கட் தொகை சூழ்நிலையியல்   ஈ. சூழ்நிலை நீச்

விடைகள்:  1.ஈ   2.ஆ   3.ஈ   4.அ   5.அ   6.அ   7.ஆ   8.இ 9.அ  10.அ  11.இ  12.ஆ  13.அ  14.ஆ  15.அ

Friday, 4 January 2013

புலிக்கு உடம்பில் கோடு வந்தது எப்படி? | நகைசுவை அறிவு கதைகள்


ஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக்க நேரிட்டது.

அப்போது எருமையைப் பார்த்த புலி, ""நீ உருவத்தில் பெரிதாக இருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பலசாலி போலவும் தெரிகிறது. ஆனால், உன்னை விட உருவத்தில் சிறியவனான மனிதன் உன் முதுகில் முகத்தடியை வைத்து நிலத்தை உழ வைக்கிறான். அப்படி உன்னை ஆட்கொள்கிற அளவிற்கு அவனிடம் என்ன சக்தி இருக்கிறது,'' எனக் கேட்டது புலி.

 ""எனது எஜமானனிடம் அறிவு இருக்கிறது,'' என்றது எருமை.

""அறிவு என்றால் எத்தகைய அறிவு?'' என்று புலி கேட்டது.

""எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், எனது நண்பர்கள் எல்லா விலங்குகளையும் ஆட்டிப் படைக்கும் அறிவு மனிதனுக்கு இருப்பதாகக் கூறினர்,'' என்றது எருமை.

""அப்படியென்றால் எனக்கும் அந்த அறிவு கிடைக்குமா?'' 

""அதை எனது எஜமானரிடம் கேட்டால்தான் தெரியும். இதோ அவரே வருகிறார்,'' என்றது எருமை.

அந்த நேரம் பார்த்து அங்கே எருமையின் எஜமானன் வந்து சேர்ந்தான். அவனுக்குப் புலியைக் கண்டதும் நடுக்கம்.

'இனி இங்கிருந்து ஓடினால் புலி நம்மை அடித்துக் கொன்று விடும். அதனால் நடப்பது நடக்கட்டும்' என்று அசட்டுத் துணிச்சலில் ஓடாமல் அங்கேயே நின்று கொண்டான்.

அப்போது புலி விவசாயியிடம் கேட்டது.

""நாங்கள் அறிவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அறிவைப் பற்றிச் சொல்லுங்கள். அது எனக்கு கொஞ்சம் கிடைக்குமா?'' என்றது.
அதைக் கேட்டதும்தான் விவசாயிக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
"இனி இந்தப் புலி நம்மை ஒன்றும் செய்யாது' என்று நினைத்த அவன், ""அறிவை நான் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை உனக்கு கொஞ்சம் எடுத்து வருகிறேன். அதனால் இங்கிருந்து நீ போய் விடாதே,'' என்று புலியிடம் கேட்டுக் கொண்டான்.

புலியும், "இனி காட்டு விலங்குகள் எல்லாம் நாம் சொன்னபடி நடக்கும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ""நான் எங்கும் போய் விட மாட்டேன். இங்கேதான் இருப்பேன்,'' என்றது.

""நான் போன பிறகு எருமையை நீ அடித்துச் சாப்பிட்டு விடமாட்டாயே?''

""நிச்சயம் சாப்பிட மாட்டேன்!''

""சரி, உன்னைக் கட்டிப் போட்டால் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டாயே?''

""மாட்டேன்!''

புலி அப்படிச் சொன்னதும் அதைப் பிடித்து ஒரு மரத்தில் விவசாயி இறுக்கமாகக் கட்டிப் போட்டான். பிறகு, ""இந்தக் கட்டு களை அவிழ்த்து விட்டு நீ போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல,'' என்றான் விவசாயி.
புலியும், ""சரி!'' என்றது.

""ஒரு நிமிடம்... அறிவு என்னிடமே இருக்கிறது. நான்தான் மறந்து போய் வீட்டி லிருக்கிறது என்று சொல்லிவிட்டேன்,'' என்றான்.

""அப்படியா? உடனே அதை எனக்கும் கொஞ்சம் கொடு,'' என்றது புலி.

""இதோ, என்றவாறே ஒரு தடியை எடுத்து புலியைக் கண்,மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான் விவசாயி. அவ்வளவுதான், புலி வலியால் துடிதுடிக்க ஆரம்பித்தது.

""ஏய்! முட்டாள் விவசாயி... என்னை எதற்கு அடிக்கிறாய்?''

""நீதானே அறிவை கேட்டாய். அதைத்தான் உன்னிடம் காண்பிக்கிறேன். இனி நீ எனது எல்லைப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்தால் அவ்வளவுதான் கொன்றே விடுவேன்,'' என்று சொல்லிவிட்டு விவசாயி அங்கிருந்து சென்று விட்டான்.

புலிக்கோ உடல் முழுக்க சரியான ரத்தக்காயம்... எப்படியோ போராடி கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிவிட்டது.

புலியின் மீது பட்ட அடிதான் நாளடைவில் அதன் கோடுகளாகிப் போனதாம். புலியின் உடலில் கோடுகள் இருப்பதற்கு வியட்நாமிய கிராம மக்கள் இப்படியொரு கதையை கூறுகின்றனர் குட்டீஸ்... புலிக்கு கோடு  வந்தது எப்படின்னு தெரிஞ்சுகிட்டீங்களா?
கதை தானே ஜாலியா எடுத்துக்கோங்க!

Samsung Galaxy Note II CDMA

Samsung Galaxy Note II CDMA
MORE PICTURES


GENERAL2G NetworkGSM 850 / 900 / 1800 / 1900 - SCH-I605, SPH-L900
 CDMA 800 / 1900 - SCH-I605, SPH-L900, SCH-R950
3G NetworkHSDPA 850 / 900 / 1900 / 2100 - SCH-I605, SPH-L900
 CDMA2000 1xEV-DO - SCH-I605, SPH-L900, SCH-R950
4G NetworkLTE 700 MHz Class 13 - SCH-I605, SCH-R950
 LTE 1900 - SPH-L900
SIMMicro-SIM
Announced2012, Q3
StatusAvailable. Released 2012, Q4
BODYDimensions151.1 x 80.5 x 9.4 mm (5.95 x 3.17 x 0.37 in)
Weight179.4 g (6.31 oz)
 - S Pen stylus
DISPLAYTypeSuper AMOLED capacitive touchscreen, 16M colors
Size720 x 1280 pixels, 5.5 inches (~267 ppi pixel density)
MultitouchYes
 - TouchWiz UI
SOUNDAlert typesVibration; MP3, WAV ringtones
LoudspeakerYes
3.5mm jackYes
MEMORYCard slotmicroSD, up to 64 GB
Internal16 GB, 2 GB RAM
DATAGPRSYes - SCH-I605, SPH-L900
EDGEYes - SCH-I605, SPH-L900
SpeedEV-DO Rev. A, up to 3.1 Mbps; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL; HSDPA, 42 Mbps; HSUPA, 5.76 Mbps
WLANWi-Fi 802.11 a/b/g/n, dual-band, DLNA, Wi-Fi Direct, Wi-Fi hotspot
BluetoothYes, v4.0 with A2DP, LE, EDR
NFCYes
USBYes, microUSB (MHL) v2.0, USB Host support
CAMERAPrimary8 MP, 3264x2448 pixels, autofocus, LED flash
FeaturesSimultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization
VideoYes, 1080p@30fps
SecondaryYes, 1.9 MP
FEATURESOSAndroid OS, v4.1.x (Jelly Bean)
ChipsetExynos 4412 Quad
CPUQuad-core 1.6 GHz Cortex-A9
GPUMali-400MP4
SensorsAccelerometer, gyro, proximity, compass, barometer
MessagingSMS(threaded view), MMS, Email, Push Mail, IM, RSS
BrowserHTML5
RadioStereo FM radio with RDS - SCH-I605, SCH-R950
GPSYes, with A-GPS support and GLONASS
JavaYes, via Java MIDP emulator
ColorsTitanium Gray, Marble White
 - S-Voice natural language commands and dictation
- Smart Stay and Smart Rotate eye tracking
- SNS integration
- Active noise cancellation with dedicated mic
- TV-out (via MHL A/V link)
- MP4/DivX/XviD/WMV/H.264/H.263 player
- MP3/WAV/eAAC+/AC3/FLAC player
- Organizer
- Image/video editor
- Document editor (Word, Excel, PowerPoint, PDF)
- Google Search, Maps, Gmail,
YouTube, Calendar, Google Talk, Picasa integration
- Voice memo/dial/commands
- Predictive text input (Swype)
BATTERY Li-Ion 3100 mAh battery
Stand-byUp to 250 h (2G) / Up to 300 h (3G)
Talk timeUp to 15 h
Music playUp to 40 h