1Alchemy இந்த பூவலகில் உள்ள அத்தனை பொருட்களும் பூமி தண்ணீர் காற்று தீ ஆகிய நான்கு அடிப்படபொருட்களின் கலந்த கலவையாகும் இவைகளில் 300 க்குமேலான பொருட்கள் எவையெவை சேர்ந்த கலவையாலானது என அறிந்து கொள்ள பயன்படுகின்றது
2Elements 2.0 ஒவ்வொரு பொருளின் அடிப்படை மூலக்கூறின் இயற்பியல் வேதியல் வெப்பவியல் அணுவியல் ஆகிய பண்பியல்புகளை இதிலுள்ள காலவாரியான அட்டவணையை கொண்டு (periodic table) அறிந்து கொள்ள பயன்படுகின்றது
3Instant Heart rate செல்லிடத்து பேசியின் கேமரா லென்ஸ்மீது நம்முடைய விரல் நுணியை வைத்தால் போதும் இந்த பயன்பாடானது நம்முடைய இதயதுடிப்பின் வேகம் இரத்த ஒட்டத்தின் தன்மை இதனை தொடர்ந்து நம்முடைய தோலின் நிறம் இதனால் எவ்வாறு பாதிப்படையும் என்பன போன்ற தகவலைஅறிந்து கொள்ள பயன்படுகின்றது
4Wifi Analyzer அருகில் பயன்படுத்துவோரின் வொய்ஃபையின் சைகை திறன் அளவு நம்முடைய வீட்டில் எந்தெந்த இடத்தில் வொய்ஃபை சைகை கிடைக்காது நம்முடைய வொய்ஃபையும் அருகில் பயன்படுத்துவோரின் வொய்ஃபையும் சந்தித்து கொள்ளும் இடம் எது என்பனபோன்ற தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுகின்றது