Click here

Your Ad Here

Wednesday, 6 February 2013

பருமனும், உடற்பயிற்சியும்

உடல் பருமனான டீனேஜர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி. சிகரெட் பிடிப்பது, பசி எடுப்பதை தடை செய்யும், இதனால் உடல் இளைத்துப் போகும் என்பது தவறான நம்பிக்கையாகும். 

மேலும், புகை பிடிப்பது, கொழுப்பு சத்து உள்ள பகுதியை மோசமாக பாதித்து, இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகமாகப் போய் தேங்கும் அபாயம் உள்ளது. `புகைப் பிடிப்பதை நிறுத்துங்கள்!'

உடல் பருமனைக் குறைக்க, மதுப்பழக்கத்தை உடனே கைவிடுங்கள். மது கலோரி அளவை அதிகரிக்கச் செய்யும்.

உடற்பயிற்சிக் கலையில் நீச்சலும், பிற நீர் உடற்பயிற்சிகளும் மிகச் சிறந்தவையாக மருத்துவர்களால் கருதப்படுகின்றன. நீர் உடற்பயிற்சியில் நம் அனைத்து உடற்பாகங்களும் இயங்குகின்றன. உடல் இயக்கம் அதிகம் தேவைப்படும் விளையாட்டுகளில் வயதானவர்கள் பங்கு பெற நீச்சல் பெரிதும் உதவுகிறது. உதாரணமாக, ஓட்டம் மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள்.

நீர் உடற்பயிற்சிகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவி புரிகின்றன. இதனால் நாம் தினசரி வேலைகளை செய்யும்போது கூட உடல் உஷ்ணமடையாமல் பாதுகாக்கப்படுகிறது..

No comments:

Post a Comment