Click here

Your Ad Here

Friday, 21 December 2012

மரக்கறிகள் (List of Vegetables)


உலகில் விளையும் மரக்கறி வகைகளின் பட்டியல் இங்கே இடப்பட்டுள்ளது. இவற்றில் சகல மரக்கறிகளுக்கான தமிழ் பெயர்கள் இல்லை என்றே நினைக்கின்றேன்.

இருப்பினும் இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை சொடுக்கி அப்பெயருக்குறிய மரக்கறிகளின் நிழல் படங்களைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.


இலஆங்கிலம்தமிழ்
1Alfalfa Sproutsஅல்பல்பா முளைக்கீரை
2Artichokeஆர்றிச்சோக்
3Arugulaஅருகுலாக் கீரை
4Asparagusதண்ணீர்விட்டான் கிழங்கு
5Aubergines/Eggplantகத்தரிக்காய்
6avocadoயாணைக்கொய்யா
7Bamboo Shootsமூங்கில் குருத்து
8Bean Sproutsஅவரை முளை
9Beet Greensஅக்காரக்கீரை
10Beetrootஅக்காரக்கிழங்கு/ சர்க்கரைக் கிழங்கு
11Bell Peppers/ Capsicumகுடைமிளகாய்
12Bitter Gourdபாகற்காய்/ பாவக்காய்
13Bitter Cucumberபாகற்காய் பெரிது
14Bok Choi/ Chinese Cabbageபொக்ச்சோய்
15Borlotti Beansசிகப்பு அவரை
16Bottle Gourdசுரைக்காய்
17bread fruitகொட்டைப்பலா/ ஈரப்பலா
18Brinjalகத்தரிக்காய்/வழுதுணங்காய்
19Brocoli(பச்சை) பூக்கோசு
20Broccoli Rape/ Rapiniகோசுக்கீரை
21Brussels Sproutsகளைக்கோசு
22Butter Head Lettuceஒரு விதக் கோசுக்கீரை
23Cabbageமுட்டைக்கோசு
24Caiguaகைகுவா
25Carrotகுருக்கிழங்கு
26Cassava/ Tapiocaமரவள்ளிக் கிழங்கு
27Cauliflowerவெண்பூக்கோசு/ கவிப்பூ
28Celeryசீவரிக்கீரை
29Celtuceஒரு விதத் தண்டுக்கீரை
30Ceylon Spinachசாரணைக்கீரை
31Chayoteசவ்சவுக்காய்
32Cherry Tomatoesகுருந்தக்காளி
33Cilantro/ Corianderகொத்தமல்லி
34Cluster Beansகொத்தவரை
35Collardsசீமை பரட்டைக்கீரை
36Cressதளிர்பயறு
37Cucumberவெள்ளிரிக்காய்
38Daikon radishவெண் முள்ளங்கி
39Endiveஒரு வகை கோசு (சலாது)
40Fava bean/ Broad beanஅவரை (போஞ்சி)
41Fiddleheadமீனாக்கொழுந்து
42Florence Fennelஒரு வகைச் சீமைக்கீரை
43Flowering Cabbage(மலர்ப்போன்ற) கோசு
44French beanபிரஞ்சு அவரை (போஞ்சுக்காய்)
45Golden Nuggest Squashஒருவகை சிறியப் பூசணி
46Green Onions/ Spring Onoinsவெங்காயத்தாள்(பூ
47Humberg parsley(சிறியவகை) வெண்முள்ளங்கி
48Haricot Beansமெல்லிய அவரை
49Drum stickமுருக்கங்காய்/ முருங்கைக்காய்
50Ironbark Pumpkinகற்பூசணி
Kai-Lan
52Kaleபரட்டைக்கீரை
53Kohlrabiநோக்கோல்
54Kohlrabi Purpleநோக்கோல் (ஊதா)
55Kohilaகோகிலத்தண்டு
56Lady's Finger/ Okraவெண்டைக்காய்/ வெண்டிக்காய்
57Leeksலீக்ஸ்
58Lettuceஇலைக்கோசு
59Lettuce Redஇலைக்கோசு (சிகப்பு)
60Lotus rootதாமரைக்கிழங்கு
61Marrow(மிகப்பெரிய வகையான) பூசணி
62Minikin Pumpkinவட்டுப்பூசணி
63Mintபுதினா
64Mizunaமிதுனாக்கீரை
65Pak Choiபச்சோய்
66Parsleyவேர்க்கோசு
67Pasnipsஒரு வகை முள்ளங்கி
68Parwalஒரு வகை சிறியக்காய்
69Plantainகறி வாழை
70Potatoஉருளைக்கிழங்கு
71Pumpkinபூசணிக்காய்/ பறங்கிக்காய்/வட்டக்காய்
72Radicchio/ Red chicoryசெங்கோசு
73Red Carrotசெம்முள்ளங்கி
74Radishமுள்ளங்கி
75Rainbow Chardவானவில் கோசுக்கீரை
76Ridge Gourd/Luffaபிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
77Ribbed Courdபிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
78Rhubarbஒரு வகை பெரிய இலைக்கீரை
79Romanesco Broccoliகடற்சிப்பிக்கோசு
80Samphireஒருவகை தண்டுக்கீரை
81Savoy Cabbageசாவோய் பூக்கோசு
82Shallotசிறிய வெங்காயம்
83Snake bean/ Long beanபயத்தங்காய்
84Snake Gourdபுடலங்காய்
85Snow Peaஒரு வகை அவரை
86Solanum/ Tindaவட்டுக்காய்
87Solanum torvom/ Pea auberginesசுண்டைக்காய்
88Squashசுரைக்காய்
89Spaghetti Squash(இசுப்பெகடி) பூசணி
90Spinachகீரை
91Sweet Potatoவற்றாளை/ சர்க்கரை வள்ளி
92Banana Flowerவாழைப்பொத்தி/ வாழைப்பூ
93Tatsoiரற்சோய்
94Tomatoதக்காளி
95Tomato Cherryகுருந்தக்காளி
96Tomato Hybridசீமைத்தக்காளி
97Turnipஒரு வகை முள்ளங்கி
98Water Chestnutஒருவகைக் காய்
99Water Spinach/ Kang Kungகங்குங் கீரை
100Wax beanமஞ்சல் அவரை/ மஞ்சல் போஞ்சி)
101West Indian Gherkinஒரு வகை மேற்கிந்தியக் காய்
102White Bitter gourdவெள்ளைப் பாகற்காய்
103White Eggplantவெள்ளைக் கத்தரி
104White globe radishவெண்ணுருண்டை முள்ளங்கி
105Zucchiniசீமைக்கூடாரக்காய்

கவனிக்கவும்

இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகள் அனைத்திற்கும் இணையானத் தமிழ் பெயர்கள் இல்லை அல்லது எமக்கு தெரியாது என்பதை அறியத் தருகின்றோம். அதேவேளை அனைத்து மரக்கறிகளுக்குமான தமிழ் பெயர்கள் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்காது என்றே கூறவேண்டும். காரணம் வெவ்வேறு நாடுகளில் விளையும் காய்கறிகளூக்கெல்லாம் தமிழில் பெயரிடப்பட்டிருக்காது எனும் நம்பிக்கைத்தான்.

ஆனால் அன்றாடம் தமிழர் உணவில் பயன்படும் மரக்கறி வகைகளின் பெயர்கள், தமிழில் சூட்டப்பட்டப் பெயர்கள், தமிழரான எமக்கே தெரியவிட்டால் வெட்கப்படவேண்டியவர்களில் நானும் ஒருவன் தான்.

இதுப்போன்ற சமயங்களில் தான் இராம்கி ஐயா போன்றோரின் தமிழ் பணியின் அவசியம் புரிகின்றது. இங்கே இந்த மரக்கறிகள் பட்டியலில் இடப்பட்டிருக்கும் அக்காரக்கிழங்கு, குருக்கிழங்கு போன்ற பெயர்சொற்கள் அவரின் பதிவூடாக அறிந்துக்கொண்டது தான்.

பழங்கள் (List of Fruits)


பழ வகைகளின் பெயர்கள் இங்கே ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பழங்களின் தமிழ் பெயர்கள் தெரியாததால் அல்லது இல்லாததால் ஆங்கில ஒலிப்பெயர்ப்புச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்பெயருக்குரிய பழங்கள் எது என்று தெரியாவிட்டால், குறிப்பிட்ட பெயரைச் சொடுக்கி பழத்தின் நிழல் படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள்.

இப்பழங்களின் பெயர்களுக்கான சரியான உச்சரிப்புக்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

List of Fruits.mp3
இலஆங்கிலம்தமிழ்
1Appleகுமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
2Ambarellaஅம்பிரலங்காய்
3Annonaசீத்தாப்பழம்
4Annona muricataமுற்சீத்தாப்பழம்
5Apricotசர்க்கரைப்பாதாமி
6Avocadoவெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
7Bananaவாழைப்பழம்
8Batoko Plumலொவிப்பழம்
9Bell fruitபஞ்சலிப்பழம், ஜம்பு
10Bilberryஅவுரிநெல்லி
11Blackberryமேற்கத்திய நாவற்பழம்
12Black currantகறுந்திராட்சை
13Blueberryஒரு வகை நெல்லி
14Bread fruitகொட்டைப்பலா, சீமைப்பலா
15Butter fruitஆனைக்கொய்யா
16Cantaloupeமஞ்சல் நிற முலாம்பழம்
17Cashew fruitமுந்திரிப்பழம், கஜு
18Cherimoyaசீத்தாப்பழம்
19Cherryசேலாப்பழம்
20Chickooசீமையிலுப்பை
21Citronகடார நாரந்தை
22Citrus aurantiumகிச்சலிப்பழம்
23Citrus reticulataகமலாப்பழம்
24Citrus sinensisசாத்துக்கொடி
25Clementineநாரந்தை
26Cocoa fruitகொகோப்பழம்
27Cranberryகுருதிநெல்லி
28Cucumberவெள்ளரிப்பழம்
29Custard appleசீத்தாப்பழம்
30Damsonஒரு வித நாவல் நிறப்பழம்
31Date fruitபேரீச்சம் பழம்
32Devilfigபேயத்தி
33Dragon fruitட்றொகன் பழம்
34Dukuடுக்கு
35Durianமுள்நாரிப்பழம், தூரியன்
36Emblicaநெல்லி
37Eugenia rubicundaசிறு நாவற்பழம்
38Feijoi/Pinealle guavaபுளிக்கொய்யா
39Figஅத்திப்பழம்
40Persimmon fruitசீமை பனிச்சம்பழம்
41Gooseberryகூஸ்பெறி
42Grapefruitபம்பரமாசு
43Grapesகொடி முந்திரி, திராட்சை
44Guavaகொய்யாப்பழம்
45Honeydew melonதேன் முழாம்பழம்
46Huckle berry(ஒரு வித) நெல்லி
47Jack fruitபலாப்பழம்
48Jumbu fruitஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
49Jamun fruitநாகப்பழம்
50Kiwi fruitபசலிப்பழம்
51Kumquat(பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
52Kundangமஞ்சல் நிற சிறிய பழம்
53Lansiumலன்சியம்
54Lemonவர்க்கப்பழம்
55Limeஎழுமிச்சை
56Loganberryலோகன் பெறி
57Longanகடுகுடாப் பழம்
58Louvi fruitலொவிப்பழம்
59Lycheeலைச்சி
60Mandarinமண்டரின் நாரந்தை
61Mangoமாம்பழம்
62Mangosteenமெங்கூஸ் பழம்
63Melonஇன்னீர்ப் பழம், முழாம்பழம்
64Morus macrouraமசுக்குட்டிப்பழம்
65Mulberryமுசுக்கட்டைப் பழம்
66Muscat grapeதிராட்சை
67Orangeதோடம்பழம்
68Palm fruitபனம் பழம்
69Papayaபப்பாப் பழம்
70Passion fruitகொடித்தோடை
71Peachகுழிப்பேரி
72Pearபேரி, பெயார்ஸ்
73Pine appleஅன்னாசிப் பழம்
74Plumஆல்பக்கோடா
75Pomegranateமாதுளம் பழம், மாதுளை
76Pomeloபம்பரமாசு
77Pulasan(ஒரு வகை)றம்புட்டான்
78Quinceசீமை மாதுளம்பழம்
79Rambutanறம்புட்டான்
80Rasberryபுற்றுப்பழம்
81Red bananaசெவ்வாழைப் பழம்
82Red Currantஒரு வித லொவி
83Sapodillaசீமையிலுப்பை
84Satsumaநாரத்தை
85Sour sop/ Guanabanaஅன்னமுன்னா பழம்
86Strawberryசெம்புற்றுப்பழம்
87Syzygiumஜம்புப்பழம்
88Tamarilloகுறுந்தக்காளி
89Tamarindபுளியம்பழம்
90Tangerineதேன் நாரந்தை
91Tomatoதக்காளிப்பழம்
92Ugli fruitமுரட்டுத் தோடை
93Water melonவத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
94Wax jumbuநீர்குமளிப்பழம்
95Resberryஇளஞ்செம்புற்றுப் பழம்
96Woodappleவிளாம்பழம்

குறிப்பு:

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை என்றே நினைக்கின்றேன். காரணம் உலகில் வெவ்வேறு தேசங்களில் அந்தந்த நாட்டு தற்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை, அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அறியப்படுகின்றது/அழைக்கப்படுகின்றது.

உதாரணமாக:

Lychee - லைச்சி (இது சீனாவில் அதிகமாகக் காணப்படும் ஒரு விதப்பழம். சீன மொழியிலான " Lychee" எனும் பெயரே இன்று உலகளாவிய ரீதியாகப் புழக்கத்தில் உள்ளது. இன்னுமொரு பழம் "Mandarin" இது ஒரு சில அடிகள் மட்டுமே வளரும் சிறிய மரத்தில் தோன்றும் ஒரு வித நாரந்தம் பழம். சீன மண்டரின் மக்களின் பெருநாள் காலத்தில் (இம்மரத்தின் காய்கள் பழுக்கும் காலம்) அப் பழங்களோடு மரத்தை வீடுகளில், கட்டிடங்களில் அழகுக்கு வைப்பது அவர்கள் மரபு. இதனால் இப்பழத்தின் பெயர் "Mandarin" என்றே பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

தமிழில் எமது மொழிப் பெயரான "மாங்காய்" என்பதையல்லோ "Mango" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.

எனவே உலகில் உள்ள எல்லா வகையானப் பழங்களது பெயர்களையும் தமிழ் படுத்துதல் அவசியமான ஒன்றாகத் தோன்றவில்லை. அப்படியே தமிழ் படுத்தினாலும் அது அனைத்து தமிழ் சமுகத்தையும் சென்றடையுமா? என்பது இன்னுமொரு கேள்வியாகும். "Apple" எனும் பழத்திற்கு தமிழில் குமளிப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்றெல்லாம் தமிழ் படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பயன்பாட்டில் "ஆப்பிள்" எனும் சொல்தான் அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.

இருப்பினும் புழக்கத்தில் வேற்று மொழி சொற்களை நாம் பயன்படுத்தினாலும், அவற்றிற்கான தமிழ் கலைச்சொற்கள் இருக்குமாயின் அவற்றை தமிழர்களான நாம் அறிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும். இவ்வலைத்தளத்தில் எழுதப்பட்டிருக்கும் பழங்களின் பெயர்களுக்கான தமிழ் கலைச்சொற்கள் அல்லது வேறு ஒத்தக்கருத்துச் சொற்கள் அறிந்திருப்பீர்களானால் அவற்றைப் பின்னூட்டத்தில் குறித்து வைத்துவிட்டுச் செல்லும் படிக்கேட்டுக்கொள்கின்றேன். அவை யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம் அல்லவா?

கறிச்சுவையூட்டிகள் (List of Provisions)


சமைக்கும் கறிகளின் சுவை, கறிச்சுவையூட்டிகளைப் பொருத்தே அமைகின்றன. அதாவது கறியில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவையூட்டும் பொருற்களே, ஒரு கறியின் சுவையை நிர்ணயிப்பவை என்றும் கூறலாம் . இக் கறிச்சுவையூட்டிகளை "பலச்சரக்குப் பொருற்கள்" என்றும் "வாசனைப்பொருற்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

இக் கறிச்சுவையூட்டிகளின் ஆங்கிலப் பெயர்களும், அதற்கான தமிழ் பெயர்களும் இங்கே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் என்ன என அறிந்துக்கொள்ளவும், தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள் (பெயர்கள்) என்ன என அறிந்துக்கொள்ளவும் முடியும். அப்பெயர்களுக்கு உரிய கறிச்சுவையூட்டிகளின் தோற்றம் எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள விரும்புவோர், குறிப்பிட்ட சுவையூட்டியின் ஆங்கிலப் பெயருடன் வழங்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கி படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.

கறிச்சுவையூட்டிகளின் ஆங்கில உச்சரிப்பை பெற்றுக்கொள்ள விரும்புவோர், இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.

List of Provisions...

இல:ஆங்கிலம்தமிழ்
1Acorus calamusவசம்பு
2Almondsuhashuhasiபாதாம்பருப்பு
3Anise seedசோம்பு/பெருஞ்சீரகம்
4Asafetidaபெருங்காயம்
5Basil leavesதுளசி இலை
6Bay leavesபுன்னை இலை
7Bishop’s weedஓமம்
8Black cuminகருஞ்சீரகம்
9Black pepperகருமிளகு
10Butterவெண்ணைய்
11Butter milkமோர்
12Capsicumகுடைமிளகாய்
13Cardamomஏலம்
14Cashew nutமுந்திரிப்பருப்பு
15Cheeseபாலாடைக்கட்டி
16Chili powderமிளகாய் தூள்
17Chiliesமிளகாய் (கொச்சிக்காய்)
18Cinnamon Sticksகறுவாப்பட்டை
19Clovesகிராம்பு
20Coconut milkதேங்காய் பால்
21Coriander leavesகொத்தமல்லி இலை
22Coriander powderகொத்தமல்லி தூள்
23Crumb powderறஸ்குத் தூள்
24Cubesவால்மிளகு
25Cuminசீரகம்
26Curdsதயிர்
27Curry leavesகறிவேப்பிலை
28Curry powder (Masala)கறித்தூள் (பலச்சரக்குத்தூள்)
29Daun Pandan leavesஇரம்பை இலை
30Dried chiliesகாய்ந்த/செத்தல் மிளகாய்
31Dried gingerசுக்கு
32Dried hottest chiliesஉறைப்புச்செத்தல் மிளகாய்
33Dried shrimpஉலர் சிற்றிறால்
34Fennelபெருஞ்சீரகம்
35Fenugreekவெந்தயம்
36Gallnutகடுக்காய்
37Garlicவெள்ளைப்பூண்டு, உள்ளிப்பூண்டு
38Gheeநெய்
39Gingelly oilநல்லெண்ணை
40Gingerஇஞ்சி
41Gingili (seasame seeds)எள்ளு
42Green cardamomபச்சை ஏலம்
43Green chilliபச்சை மிளகாய்
44Ground nut oilகடலையெண்ணை
45Honeyதேன்
46Jaggeryசக்கரை
47Lemonஎழுமிச்சை
48Lemongrassவெட்டிவேர்/எழுமிச்சைப்புல்
49Lemongrass powderவேட்டிவேர் தூள்
50Licoriceஅதிமதுரம்
51Long pepperதிப்பிலி/ கண்டந்திப்பிலி
52Maceசாதிபத்திரி
53Milkபால்
54Mint leavesபுதினா
55Muskகஸ்தூரி
56Mustardகடுகு
57Nigella-seedsகருஞ்சீரகம்
58Nutmegசாதிக்காய்
59Oilஎண்ணை
60Onionவெங்காயம்
61Palm jiggeryபனங்கருப்பட்டி
62Pepperமிளகு
63Phaenilumமணிப்பூண்டு
64Pithecellobium dulce (Madras thorn)கொடுக்காபுளி
65Poppyகசகசா
66Raisinஉலர்திராட்சை
67Red chilliசிகப்பு மிளகாய்
68Rolongகோதுமை நெய்
69Rose waterபன்னீர்
70Saffronகுங்கமம்
71Sagoசவ்வரிசி
72Salad onionசெவ்வெங்காயம்
73Saltஉப்பு
74Sarsaparillaநன்னாரி
75Small chilliசின்ன மிளகாய்
76Small onionசின்ன வெங்காயம்
77Star aniseநட்சித்திரச் சோம்பு
78Sugarசீனி
79Tail pepperவால்மிளகு
80Tamarindபுளி
81Tomatoதக்காளி
82Turmericமஞ்சள்
83Turmeric powderமஞ்சள் தூள்
84Vermicelliசேமியா
85Vinegarகாடி (வினிகர்)
86White onionவெள்ளை வெங்காயம்


குறிப்பு:

1.
Cumin seeds - சீரகம்
Black pepper seeds - கருமிளகு

Cumin seeds, Black pepper seeds போன்ற பெயர்களின் "seeds" எனும் சொல்லும் ஆங்கிலத்தில் பின்னொட்டாக இணைந்து பயன்படுகின்றன. ஆனால் அவற்றை முறையே "சீரக விதைகள், கருமிளகு விதைகள்" எனத் தமிழில் கூறும் வழக்கம் இல்லை. சுருக்கமாக "சீரகம், கருமிளகு" என்று கூறும் வழக்கே உள்ளது. எனவே நானும் அவ்வாறே எழுதியுள்ளேன்.

2.
Cinnamon sticks - கறுவாப்பட்டை/ இலவங்கப்பட்டை

"Cinnamon Sticks" எனும் சொல்லில் "Sticks" எனும் சொல் தடிகள் அல்லது குச்சிகள் என்றே பொருள்படும். ஆனால் தமிழில் "பட்டை" எனும் சொல்லே பின்னொட்டாக புழக்கத்தில் உள்ளது.

3.
Coriander leaves கொத்தமல்லி இலை
Curry leaves கறிவேப்பிலை

Leaf – இலை
Leaves – இலைகள்

மேலுள்ள சொற்களில் “Leaves” எனும் சொல் "இலைகள்" என பன்மையாகவே பயன்படுகிறது. இருப்பினும் அவற்றை "கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை" என ஒருமையில் கூறும் வழக்கே எம் தமிழில் உள்ளது.

4.
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய கேரள மாநிலமான "கொச்சின்" துறைமுகத்தில் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்ட பொழுது, அந்த காயின் பெயர், தமிழரின் பேச்சி வழக்கில் "கொச்சின் + காய் = கொச்சிக்காய்" என அழைக்கும் வழக்கானது எனும் ஒரு கூற்று உள்ளது. இப்போதும் இலங்கையில் சில இடங்களில் மிளகாய் என்பதை "கொச்சிக்காய்" என்று அழைப்போர் உள்ளனர். சிங்களவரிடம் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் எப்படி என்று தெரியாது. தெரிந்தோர் கூறுங்கள்.

தொடர்புடைய இடுகைகள்:

பழங்கள் (List of Fruits)

மரக்கறிகள் (List of Vegetables)

இவ்வட்டணையில் விடுபட்ட கறிச்சுவையூட்டிகளின் பெயர்கள் ஏதும் இருப்பின் பின்னூட்டம் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத் தந்துதவினால் இணைத்து விடுவேன்.

மனித உடல் உறுப்புகள் (Parts of the human body)


மனித உடம்பில் இருக்கும் உறுப்புகளுக்கான ஆங்கிலச் சொற்கள் அநேகமாக பலரும் அறிந்தவைகளாகவே இருக்கும். அதில் சில உறுப்புகளின் பெயர்கள் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம், புதிதாக தெரிந்துக்கொள்ள விரும்புகின்றவர்களும் இருக்கலாம். அதனால் இன்றையப் பாடத்தில் மனித உடலின் உறுப்புகளின் பெயர்களை தமிழ் விளக்கத்துடன் கற்போம்.

சரியான உச்சரிப்பு பயிற்சியை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

Aangilam. Body par...

படங்களை பெரிதாக பார்க்க விரும்புகின்றவர்கள் படங்களின் மேல் சொடுக்கிப் பார்க்கலாம்.


No:Englishதமிழ்
1Headதலை
2Eyesகண்கள்
3Earsகாதுகள்
4Cheekகன்னம்
5Noseமூக்கு
6Mouthவாய்
7Neckகழுத்து
8Nippleமுலைக்காம்பு
8AShoulderதோள்/புயம்
9Chestமார்பு/நெஞ்சு
9ARibவிலா (எலும்பு)
10Breastமார்பு (பெண்)
11Armகை
12Elbowமுழங்கை
13Abdomenவயிறு
14Umblicus/Bellybuttonதொப்புள்/நாபி
15Groinsகவட்டி
16Wristமணிக்கட்டு
17Palmஉள்ளங்கை
18Fingersவிரல்கள்
19Vegina/Vulvaயோனி/புணர்புழை
20Penisஆண்குறி
20ATesticle/scrotumவிரை
21Thighதொடை
22Kneeமுழங்கால்
23Calfகெண்டைக்கால்
24Legகால்
25Ankleகணுக்கால்
26Footபாதம்
27Toesகால் விரல்கள்


No:Englishதமிழ்
28Wristமணிக்கட்டு
29Palmஉள்ளங்கை
30Thumbகட்டைவிரல்
31Little Fingerசுண்டுவிரல்
32Ring Fingerமோதிரவிரல்
33Middle Fingerநடுவிரல்
34Index Fingerசுட்டுவிரல்
35Kneeமுழங்கால்
36Calfகெண்டைக்கால்
37Legகால்
38Lowerlegகீழ்கால்
39Ankleகணுக்கால்
40Toesகால் விரல்கள்
41Toenailsகால்(விரல்) நகங்கள்
42Footபாதம்
43heelகுதிகால்
44Fistகைமுட்டி (மூடிய கை)
45Nailநகம்
46Knuckleவிரல் மூட்டு
47Muscleதசை
48Skinதோல்
49Hairமுடி
50Foreheadநெற்றி
51Eyebrowகண் புருவம்
52Eyelashகண் இரப்பை மயிர்/ கண் மடல் முடி 
52AEyelidகண் இரப்பை/கண் மடல்/கண் இமை
53Eyeballகண்மணி
54Noseமூக்கு/நாசி
55Nostrilமூக்குத்துவாரம்/நாசித்துவாரம்
56Faceமுகம்
57Chinமுகவாய்க் கட்டை
58Adam's appleகுரல்வளை முடிச்சு (ஆண்)
59Mustacheமீசை
60Beardதாடி
61Lipஉதடு
62Uvulaஉள்நாக்கு
63Throatதொண்டை
64Molarsகடைவாய் பல்
65Premolarsமுன்கடைவாய் பல்
66Canineகோரை/நொறுக்குப் பல்
67incisorsவெட்டுப் பல்
68Gumபல் ஈறு
69Tongueநாக்கு

மேலே படங்களில் குறிக்கப்படாத சில உடல் உறுப்புகளின் பெயர்கள் கீழே இடப்பட்டுள்ளன.

No:Englishதமிழ்
70Bellyவயிறு (குழிவானப் பகுதி)
71Backமுதுகு
72Backboneமுதுகெலும்பு
73Rib boneவிலாவெலும்பு
74Buttockகுண்டி/ புட்டம்
75Anus/assholeகுதம்
76Skullகபாலம்/மண்டையோடு
77Muscularதசை
78Nerveநரம்பு
79Endocrineசுரப்பி
80Hipஇடுப்பு
81Lungநுரையீரல்
82Heartஇதயம்
83Kidneyசிறுநீரகம்
84Brainமூளை

இப் பெயர்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக் கொள்ளலாம்.

முன்னிடைச்சொற்கள் பட்டியல் (List of Prepositions)


ஆங்கில இலக்கணத்தின் பேச்சின் கூறுகளில் முன்னிடைச்சொற்களும் ஒன்றாகும். முன்னிடைச்சொற்கள் ஆங்கில மொழியில் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றில் அடிக்கடி பயன்படும் 70 முன்னிடைச்சொற்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

முன்னிடைச்சொற்களின் பயன்பாடு குறித்தப் பாடங்களை கீழே பார்க்கவும்.

உச்சரிப்பு பயிற்சிப்பெற விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலி கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறலாம்.

List of Prepositio...

No:Englishதமிழ்
1aboardகப்பலில்/கப்பல் தளத்தில்
2aboutகிட்டத்தட்ட/ சுமார்/ பற்றி/ சுற்றிலும்
3aboveமேலே/ மேல்
4acrossகுறுக்கே
5afterபின்னால்/ பிறகு / பின்
6againstஎதிராக/
7alongநீள்வட்டத்தில்/ நெடுக
8amidமத்தியில்/ இடையில்
9among(பலவற்றின்) நடுவில்/ (பலவற்றிற்கு) இடையே
10antiஎதிரான/ எதிர்
11aroundசுற்றிலும்/ சூழ்ந்து / சுமார் / கிட்டத்தட்ட
12asபோல்/ போல / போன்ற / என
13atஇல்/ இன்
14beforeமுன்னர் / முன் / முன்பு / முன்னால்
15behindபின்னால் / பின் / பின்னனியில்
16belowகீழே/ கீழ் / அடியில் 
17beneathகீழே/ கீழுருக்கும்
18besideஅருகில்/ பக்கத்தில்
19besidesமேலும்/...ஐத் தவிர/ தவிர வேறு
20between(இரண்டுக்கு) இடையில்/நடுவே
21beyondஅப்பால்/அப்பாற்பட்ட
22butஆனால் / மாறாக
23byஆல்/ மூலம்/ அருகில்
24concerningஅக்கறையுடன்/ தொடர்பான / சம்பந்தமாக / குறித்து
25consideringபரிசீலித்து/ கருத்தில் கொண்டு/ கருதி
26despiteஆனபோதிலும்/ போதிலும் / ஆயினும்/ இருப்பினும்
27downகீழே / குறைத்து
28during... காலத்தில்/...பொழுது / காலக்கட்டத்தில் / சமயத்தில்
29exceptதவிர / தவிர்த்து
30exceptingதவிர/நீங்கலாக
31excludingவிலக்குகின்ற/தவிர்க்கின்ற
32followingதொடர்ந்து / பின்வரும் 
33for...க்காக/...கு
34from... லிருந்து / இருந்து
35in... இல் / ... இன்
36insideஉள்பக்கம் / உட்புறம் / உள்ளே
37intoஉள்ளுக்குள்/உள்நோக்கி
38likeபோன்ற / ஒத்த
39minusகழித்து /குறைய / நீக்கிய
40nearஅருகில் / அருகாமையில்
41of...இன்/...இல்
42offமூடு/ அணை / அப்பால்
43onமீது / மேல் / ... இல்
44ontoஅதனுள்/ க்குள்
45oppositeஎதிரான / எதிராக / எதிர்
46outsideவெளிப்புறம்/ வெளியே/ வெளியில்
47overமேலே / மேல்/ மேலாக
48pastகடந்த / கடந்த கால
49perஆக / ஒன்றிற்கு / வீதம்
50plus...கூட / அத்துடன் / கூடுதலாக / மேலதிகமாக
51regardingகுறித்து / சம்பந்தமாக/ தொடர்பான / தொடர்பாக / பற்றி
52roundசுற்றி/ சுற்றிலும்
53since... லிருந்து/ இருந்து / ...முதல்
54thanவிட / ... விடவும் 
55throughஊடாக / மூலம் / மூலமாக
56to...க்கு 
57toward... நோக்கி/ ... க்காக
58towardsநோக்கிய / மீதான
59underஅடியில்/... ன் கீழே
60underneathஅடியில்/ கீழாக
61unlikeபோலில்லாத / போலன்றி 
62untilவரை / வரைக்கும் / மட்டும்
63upமேலே / மேல்
64uponமீது / மேல் / அடிப்படையில்
65versusஎதிராக / எதிர்
66viaவழியாக / மூலமாக
67withஉடன்
68withinஅத்துடன்
69withoutஇல்லாமல் / இன்றி
70throughoutமுழுவதும் / முழுதும் / முழுவதிலும்

இப்பட்டியலில் வழங்கப்பட்டுள்ள முன்னிடைச்சொற்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலம் கற்பதற்கு முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளை சரியாக விளங்கிக்கொள்ளல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்த இடத்தில் எந்த முன்னிடைச்சொல்லை பயன்படுத்தவேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் வாக்கியங்களில் பொருத்தமற்ற முன்னிடைச்சொற்களை பயன்படுத்திவிட்டால் முழு வாக்கியத்தின் பொருளே மாறிவிடும்.

குறிப்பு:
மேலே உள்ள பட்டியலில் 70 முன்னிடைச்சொற்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் நூற்றுக் கணக்கான முன்னிடைச் சொற்கள் உள்ளன. உங்கள் ஆங்கில மொழி ஆளுமையை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினால் இப்பட்டியிலில் உள்ளடக்கப்படாத முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.

கவனிக்கவும்:
இங்கே இப்படியலில் உள்ள சொற்கள், முன்னிடைச்சொற்களாக பயன்படும் போதான தமிழ் பொருளே மேலே வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை இச்சொற்கள் முன்னிடைச்சொற்கள் அல்லாத ஏனையப் பயன்பாட்டின் போது அவற்றில் பொருள் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

தொடர்புடைய பாடங்கள்:
ஆங்கில வாக்கியங்களில் முன்னிடைச்சொற்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதனை பயில விரும்புவோர் கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி பயிற்சி பெறவும்.

  • Prepositions Of Time (நேர முன்னிடைச்சொற்கள்)
  • Prepositions Of Place (இட முன்னிடைச்சொற்கள்)
  • Prepositions Of Direction ((திசை முன்னிடைச்சொற்கள்)

சரி! மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

Irregular verbs




   
PresentPastPast Participleதமிழ் அர்த்தம்
    
arisearosearisenஎழுந்திரு/ உதயமாகு/ஏறு
allowallowedallowedஅனுமதி/ இடங்கொடு
appearappearedappearedதோன்று
bearboreborne/bornபிரசவி/ தாங்கு/ பொறு
beatbeatbeatenஅடி/ தோழ்வியடையச் செய்
beatbeatbeatதாளம்/ இதயத் துடிப்பு
becomebecamebecomeஏற்படு/ ஒரு நிலையிலிருந்து மாறு
beginbeganbegunஆரம்பி/ தொடங்கு
bendbentbentவளை/ திருப்பு
bindboundboundகட்டு/ சேர்த்துக் கட்டு
bitebitbittenகடி
bleedbledbledஇரத்தம் வடிதல்/ இரத்தம் கசிதல்
blowblewblownஊது/ மலர்தல்
boilboiledboiledகொதிக்க வை/ அவி
borrowborrowedbrrowedகடன் வாங்கு
breakbrokebrokenஉடை/ இடைநிறுத்து
bringbroughtbroughtஎடுத்து வா/ கொண்டு வா
burnburntburntசுடு/ எரி/ கொளுத்து
burstburstburstவெடி/ வெடியெனச் சிரி
buildbuiltbuiltகட்டு/ அமை
buyboughtboughtவாங்கு (விலைக்கு)
carecaredcaredகவனி
carrycarriedcarriedதூக்கு/ சும
catchcaughtcaughtபிடி
choosechosechosenதெரிவுசெய்/ தேர்ந்தெடு
cleancleanedcleanedசுத்தமாக்கு/ சுத்தம் செய்
climbclimbedclimbedஏறு
closeclosedclosedமூடு
comecamecomeவா
completecompletedcompletedநிறைவு செய்/ பூர்த்திச் செய்
crosscrossedcrossedகடந்துச்செல்/ கட/ குறுக்கிடு
cutcutcutவெட்டு
dealdealtdealtசமாளி/ நிர்வகி/ பகிர்ந்தளி/
decoratedecorateddecorotedஅலங்கரி
deceivedeceiveddeceivedஏமாற்று
devidedevideddevidedபங்கிடு/பிரி
digdugdugதோண்டு
dodiddoneசெய்
dreamdreamtdreamtகனவு காண்
drawdrewdrawnபெறு/ இழு
drinkdrankdrunkகுடி/ பருகு
drivedrovedrivenஓட்டு
eatateeatenசாப்பிடு
enterenteredenteredநுழை/ பிரவேசி/ உட்புகு
fallfellfallenவிழு
fall downfell downfallen downகீழே விழு
fearfearedfearedபயப்படு
feedfedfedஊட்டு
feelfeltfeltஉணர்
fightfoughtfoughtசண்டையிடு
findfoundfoundகண்டுப்பிடி/ காண்
finishfnishedfinishedமுடி/ முடிவு செய்/
flyflewflownபற
forgetforgotforgotமற
forgiveforgaveforgivenமன்னிப்பளி/ மன்னித்துவிடு
freezefrozefrozenஉறை/ உறையவை
getgotgotபெறு/ அடை
givegavegivenகொடு
grindgroundgroundஅரை/அரைத்து தூளாக்கு
gowentgoneபோ
growgrewgrownவளர்/ அபிவிருத்தியடை
hanghunghungதொங்கு/ தொங்கவிடு/ தூக்கிலிடு
havehadhadபெற்றிரு/ உடைத்தாயிரு/இரு(க்கிற)
hearheardheardகேள்/கேள்விப்படு
hidehidhiddenஒழி/ மறை
hirehiredhiredவாடகைக்கு எடு
hithithitஅடி/ தாக்கு
holdheldheldபிடி/ பற்றிக்கொள்
hunthuntedhuntedவேட்டையாடு
hurthurthurtகாயப்படுத்து/ புண்படுத்து/ நோகடி
inviteinvitedinvitedஅழை/ அழைப்புவிடு/ வரவழை
jumpjumpedjumpedகுதி/ தாவு/ பாய்
keepkeptkeptவை/ வைத்துக்கொண்டிரு
kickkickedkickedஉதை
knockknockedknockedதட்டு/ குட்டு
knowknewknownஅறிந்துக்கொள்/ தெரிந்துக்கொள்
knitknitknitதை/ இணை/ பின்னு
learnlearnt/learnedlearnt/learnedபடி/ கற்றுக்கொள்
leaveleftleftவிட்டுவிடு/ பிடியைவிடு/வெளியேறு
lendlentlentகடன் கொடு
letletletஉத்தரவு கொடு/ விடு
lightlit/lightedlit/lightedவெளிச்சமாக்கு/தீ வை/கொளுத்து/
loselostlostஇழ/ தொலைத்தல்/காணாமலாக்கு
makemademadeஉண்டுபண்ணு/தயார் செய்/நிர்மாணி
marrymarriedmarriedதிருமணம் புரி/திருமணம் செய்
meetmetmetசந்தி/எதிர்படு/கூடு
movemovedmovedநகர்/நகத்து/அசை
obeyobeyedobeyedகீழ்படி
openopenedopenedதிற
orderorderedorderedகட்டளையிடு
paypaidpaidசெலுத்து/ கொடு
pickpickedpickedபொறுக்கு/ தேர்ந்தெடு
ploughploughedploughedஉழு
prayprayedprayedபி்ரார்த்தனை செய்/ தொழு
preparepreparedpreparedதயார் செய்/ ஏற்பாடுசெய்
proveprovedprovedநிரூபி
pullpulledpulledஇழு
punishpunishedpunishedதண்டி/ தண்டனையளி
pushpushedpushedதள்ளு
putputputபோடு
quarrelquarreledquarreledசண்டடையிடு/ சச்சரவிடு
reachreachedreacedசென்றடை/ சேர்தல்
readreadreadவாசி/ படி
refuserefusedrefusedமறு/ நிராகரி
rideroderiddenஓட்டு/சவாரி செய்
ringrangrungமணியடி/ மணியொலி எழுப்பு
riseroserisenமேலெழுப்பு/ஏறு/ உதி
ruinruinedruinedநாசமாக்கு/ வீணாக்கு
runrunrunஓடு/ ஓட்டு/ நடத்து
saysaidsaidசொல்/ கூறு
seesawseenகாண்/ கண்டுக்கொள்
seeksoughtsoughtதேடி(நாடி)ச்செல்/
sellsoldsoldவிற்பனையாக்கு
sendsentsentஅனுப்பு/ வழியனுப்பு
shakeshookshakenகுலுக்கு/ உலுக்கு
shearshearedshearedகத்தரி
shineshoneshoneபளிச்சிடவை
shootshotshot(குறிப்பார்த்து) சுடு
showshowedshowedகாண்பி/ காட்டு/ காட்சிப்படுத்து
shrinkshrankshrunkசுருங்கு
shutshutshutமூடு/ மூடிக்கொள்/ அடை
singsangsungபாடு
sinksanksunkமூழ்கு/ மூழ்குதல்/அமிழ்
sitsatsatஉட்கார்/ அமர்
sleepsleptsleptஉறங்கு/ நித்திரைச்செய்
smellsmelt/smelledsmelt/smelledநுகர்
speakspokespokenபேசு
sowsowedsownதூவு/தெளி/பரப்பு/விதை/விதைத்தல்
speedspedspedவேகம்/ வேகப்படுத்து
spellspeltspelt(சொல்லின்) எழுத்துக்கூட்டு
spendspentspentசெலவழி/ செலவுவிடு
spillspiltspiltஊற்று/ சிந்து
spoilspoiltspoiltகெடு
spitspat/spitspat/spitதுப்பு
spreadspreadspreadபரப்பு/ பரவச்செய்
stealstolestolenதிருடு/ களவாடு
sweepsweptsweptபெருக்கு/கூட்டு (வீடு)
swearsworeswornசபதம் செய்
swellswelledswollenவீங்கு/ உப்பு(தல்)
swimswamswumநீந்து
taketooktakenஎடு
teachtaughttaughtகற்பி/ படிப்பித்துக்கொடு
teartoretornகிழி
telltoldtoldசொல்
testtestedtestedசோதனைச்செய்
thinkthoughtthoughtஆலோசி/எண்ணமிடு/கருது/நினை
throwthrewthrownவீசு/எறி
trusttrust/trustedtrust/trustedநம்பு/நம்பியிரு
understandundestoodunderstoodவிளங்கிக்கொள்/புரிந்துக்கொள்
wakewokewokenவிழித்தெழு
wearworewornஅணி/உடுத்து
weavewovewovenநெசவு செய்/பின்னு
weepweptweptஅழு/புலம்பு
wetwetwetநனை/ஈரமாக்கு
winwonwonவெற்றியடை/வெற்றிபெறு
wishwishedwishedவிரும்பு/ஆசைப்படு
wringwrungwrungபிழி/முறுக்கிப்பிழி
writewrotewrittenஎழுது
    
கவனத்திற்கு:  
    
முக்காலமும் ஒரே மாதிரி இருப்பவைகள் (All Three forms are similar)
உதாரணம்:   
betbetbet 
    
நிகழ்காலமும் இறந்தக்காலமும் ஒரே மாதிரி இருப்பவைகள்
(Present Tense and Past Tense are similar) 
உதாரணம்:   
beatbeatbeaten 
    
இறந்தக் காலத்தை தவிர மற்ற இரண்டும் ஒரே மாதிரி இருப்பவைகள்
(Present Tense and Past Particple are similar) 
உதாரணம்:   
comecamecome 
    
நிகழ்காலத்தைத் தவிர மற்ற இரண்டும் ஒரே மாதிரி இருப்பவைகள்
(Past Tense and Past Participle are similar) 
உதாரணம்:   
bringbroughtbrought 
    
முக்காலச் சொற்களும் வித்தியாசமாக இருப்பவைகள் (All 3 forms are different)
உதாரணம்:   
beginbeganbegun 
    

இது "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கான உதவி பக்கமாகும். ப்ளொக்கரில் அட்டவணையிட்டு எழுதுவது வசதியாகயின்மையினால் "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கான "Irregular verbs "அட்டவணையை இங்கே இடப்பட்டுள்ளது.

ஆங்கிலம் வலைத்தளத்திற்கு திரும்பவும் 

(ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கான ஒலிதக் கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது.)