Click here

Your Ad Here

Friday, 21 December 2012

பழங்கள் (List of Fruits)


பழ வகைகளின் பெயர்கள் இங்கே ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பழங்களின் தமிழ் பெயர்கள் தெரியாததால் அல்லது இல்லாததால் ஆங்கில ஒலிப்பெயர்ப்புச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்பெயருக்குரிய பழங்கள் எது என்று தெரியாவிட்டால், குறிப்பிட்ட பெயரைச் சொடுக்கி பழத்தின் நிழல் படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள்.

இப்பழங்களின் பெயர்களுக்கான சரியான உச்சரிப்புக்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

List of Fruits.mp3
இலஆங்கிலம்தமிழ்
1Appleகுமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
2Ambarellaஅம்பிரலங்காய்
3Annonaசீத்தாப்பழம்
4Annona muricataமுற்சீத்தாப்பழம்
5Apricotசர்க்கரைப்பாதாமி
6Avocadoவெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
7Bananaவாழைப்பழம்
8Batoko Plumலொவிப்பழம்
9Bell fruitபஞ்சலிப்பழம், ஜம்பு
10Bilberryஅவுரிநெல்லி
11Blackberryமேற்கத்திய நாவற்பழம்
12Black currantகறுந்திராட்சை
13Blueberryஒரு வகை நெல்லி
14Bread fruitகொட்டைப்பலா, சீமைப்பலா
15Butter fruitஆனைக்கொய்யா
16Cantaloupeமஞ்சல் நிற முலாம்பழம்
17Cashew fruitமுந்திரிப்பழம், கஜு
18Cherimoyaசீத்தாப்பழம்
19Cherryசேலாப்பழம்
20Chickooசீமையிலுப்பை
21Citronகடார நாரந்தை
22Citrus aurantiumகிச்சலிப்பழம்
23Citrus reticulataகமலாப்பழம்
24Citrus sinensisசாத்துக்கொடி
25Clementineநாரந்தை
26Cocoa fruitகொகோப்பழம்
27Cranberryகுருதிநெல்லி
28Cucumberவெள்ளரிப்பழம்
29Custard appleசீத்தாப்பழம்
30Damsonஒரு வித நாவல் நிறப்பழம்
31Date fruitபேரீச்சம் பழம்
32Devilfigபேயத்தி
33Dragon fruitட்றொகன் பழம்
34Dukuடுக்கு
35Durianமுள்நாரிப்பழம், தூரியன்
36Emblicaநெல்லி
37Eugenia rubicundaசிறு நாவற்பழம்
38Feijoi/Pinealle guavaபுளிக்கொய்யா
39Figஅத்திப்பழம்
40Persimmon fruitசீமை பனிச்சம்பழம்
41Gooseberryகூஸ்பெறி
42Grapefruitபம்பரமாசு
43Grapesகொடி முந்திரி, திராட்சை
44Guavaகொய்யாப்பழம்
45Honeydew melonதேன் முழாம்பழம்
46Huckle berry(ஒரு வித) நெல்லி
47Jack fruitபலாப்பழம்
48Jumbu fruitஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
49Jamun fruitநாகப்பழம்
50Kiwi fruitபசலிப்பழம்
51Kumquat(பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
52Kundangமஞ்சல் நிற சிறிய பழம்
53Lansiumலன்சியம்
54Lemonவர்க்கப்பழம்
55Limeஎழுமிச்சை
56Loganberryலோகன் பெறி
57Longanகடுகுடாப் பழம்
58Louvi fruitலொவிப்பழம்
59Lycheeலைச்சி
60Mandarinமண்டரின் நாரந்தை
61Mangoமாம்பழம்
62Mangosteenமெங்கூஸ் பழம்
63Melonஇன்னீர்ப் பழம், முழாம்பழம்
64Morus macrouraமசுக்குட்டிப்பழம்
65Mulberryமுசுக்கட்டைப் பழம்
66Muscat grapeதிராட்சை
67Orangeதோடம்பழம்
68Palm fruitபனம் பழம்
69Papayaபப்பாப் பழம்
70Passion fruitகொடித்தோடை
71Peachகுழிப்பேரி
72Pearபேரி, பெயார்ஸ்
73Pine appleஅன்னாசிப் பழம்
74Plumஆல்பக்கோடா
75Pomegranateமாதுளம் பழம், மாதுளை
76Pomeloபம்பரமாசு
77Pulasan(ஒரு வகை)றம்புட்டான்
78Quinceசீமை மாதுளம்பழம்
79Rambutanறம்புட்டான்
80Rasberryபுற்றுப்பழம்
81Red bananaசெவ்வாழைப் பழம்
82Red Currantஒரு வித லொவி
83Sapodillaசீமையிலுப்பை
84Satsumaநாரத்தை
85Sour sop/ Guanabanaஅன்னமுன்னா பழம்
86Strawberryசெம்புற்றுப்பழம்
87Syzygiumஜம்புப்பழம்
88Tamarilloகுறுந்தக்காளி
89Tamarindபுளியம்பழம்
90Tangerineதேன் நாரந்தை
91Tomatoதக்காளிப்பழம்
92Ugli fruitமுரட்டுத் தோடை
93Water melonவத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
94Wax jumbuநீர்குமளிப்பழம்
95Resberryஇளஞ்செம்புற்றுப் பழம்
96Woodappleவிளாம்பழம்

குறிப்பு:

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை என்றே நினைக்கின்றேன். காரணம் உலகில் வெவ்வேறு தேசங்களில் அந்தந்த நாட்டு தற்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை, அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அறியப்படுகின்றது/அழைக்கப்படுகின்றது.

உதாரணமாக:

Lychee - லைச்சி (இது சீனாவில் அதிகமாகக் காணப்படும் ஒரு விதப்பழம். சீன மொழியிலான " Lychee" எனும் பெயரே இன்று உலகளாவிய ரீதியாகப் புழக்கத்தில் உள்ளது. இன்னுமொரு பழம் "Mandarin" இது ஒரு சில அடிகள் மட்டுமே வளரும் சிறிய மரத்தில் தோன்றும் ஒரு வித நாரந்தம் பழம். சீன மண்டரின் மக்களின் பெருநாள் காலத்தில் (இம்மரத்தின் காய்கள் பழுக்கும் காலம்) அப் பழங்களோடு மரத்தை வீடுகளில், கட்டிடங்களில் அழகுக்கு வைப்பது அவர்கள் மரபு. இதனால் இப்பழத்தின் பெயர் "Mandarin" என்றே பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

தமிழில் எமது மொழிப் பெயரான "மாங்காய்" என்பதையல்லோ "Mango" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.

எனவே உலகில் உள்ள எல்லா வகையானப் பழங்களது பெயர்களையும் தமிழ் படுத்துதல் அவசியமான ஒன்றாகத் தோன்றவில்லை. அப்படியே தமிழ் படுத்தினாலும் அது அனைத்து தமிழ் சமுகத்தையும் சென்றடையுமா? என்பது இன்னுமொரு கேள்வியாகும். "Apple" எனும் பழத்திற்கு தமிழில் குமளிப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்றெல்லாம் தமிழ் படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பயன்பாட்டில் "ஆப்பிள்" எனும் சொல்தான் அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.

இருப்பினும் புழக்கத்தில் வேற்று மொழி சொற்களை நாம் பயன்படுத்தினாலும், அவற்றிற்கான தமிழ் கலைச்சொற்கள் இருக்குமாயின் அவற்றை தமிழர்களான நாம் அறிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும். இவ்வலைத்தளத்தில் எழுதப்பட்டிருக்கும் பழங்களின் பெயர்களுக்கான தமிழ் கலைச்சொற்கள் அல்லது வேறு ஒத்தக்கருத்துச் சொற்கள் அறிந்திருப்பீர்களானால் அவற்றைப் பின்னூட்டத்தில் குறித்து வைத்துவிட்டுச் செல்லும் படிக்கேட்டுக்கொள்கின்றேன். அவை யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம் அல்லவா?

No comments:

Post a Comment