Click here

Your Ad Here

Friday, 21 December 2012

கறிச்சுவையூட்டிகள் (List of Provisions)


சமைக்கும் கறிகளின் சுவை, கறிச்சுவையூட்டிகளைப் பொருத்தே அமைகின்றன. அதாவது கறியில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவையூட்டும் பொருற்களே, ஒரு கறியின் சுவையை நிர்ணயிப்பவை என்றும் கூறலாம் . இக் கறிச்சுவையூட்டிகளை "பலச்சரக்குப் பொருற்கள்" என்றும் "வாசனைப்பொருற்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

இக் கறிச்சுவையூட்டிகளின் ஆங்கிலப் பெயர்களும், அதற்கான தமிழ் பெயர்களும் இங்கே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் என்ன என அறிந்துக்கொள்ளவும், தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள் (பெயர்கள்) என்ன என அறிந்துக்கொள்ளவும் முடியும். அப்பெயர்களுக்கு உரிய கறிச்சுவையூட்டிகளின் தோற்றம் எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள விரும்புவோர், குறிப்பிட்ட சுவையூட்டியின் ஆங்கிலப் பெயருடன் வழங்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கி படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.

கறிச்சுவையூட்டிகளின் ஆங்கில உச்சரிப்பை பெற்றுக்கொள்ள விரும்புவோர், இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.

List of Provisions...

இல:ஆங்கிலம்தமிழ்
1Acorus calamusவசம்பு
2Almondsuhashuhasiபாதாம்பருப்பு
3Anise seedசோம்பு/பெருஞ்சீரகம்
4Asafetidaபெருங்காயம்
5Basil leavesதுளசி இலை
6Bay leavesபுன்னை இலை
7Bishop’s weedஓமம்
8Black cuminகருஞ்சீரகம்
9Black pepperகருமிளகு
10Butterவெண்ணைய்
11Butter milkமோர்
12Capsicumகுடைமிளகாய்
13Cardamomஏலம்
14Cashew nutமுந்திரிப்பருப்பு
15Cheeseபாலாடைக்கட்டி
16Chili powderமிளகாய் தூள்
17Chiliesமிளகாய் (கொச்சிக்காய்)
18Cinnamon Sticksகறுவாப்பட்டை
19Clovesகிராம்பு
20Coconut milkதேங்காய் பால்
21Coriander leavesகொத்தமல்லி இலை
22Coriander powderகொத்தமல்லி தூள்
23Crumb powderறஸ்குத் தூள்
24Cubesவால்மிளகு
25Cuminசீரகம்
26Curdsதயிர்
27Curry leavesகறிவேப்பிலை
28Curry powder (Masala)கறித்தூள் (பலச்சரக்குத்தூள்)
29Daun Pandan leavesஇரம்பை இலை
30Dried chiliesகாய்ந்த/செத்தல் மிளகாய்
31Dried gingerசுக்கு
32Dried hottest chiliesஉறைப்புச்செத்தல் மிளகாய்
33Dried shrimpஉலர் சிற்றிறால்
34Fennelபெருஞ்சீரகம்
35Fenugreekவெந்தயம்
36Gallnutகடுக்காய்
37Garlicவெள்ளைப்பூண்டு, உள்ளிப்பூண்டு
38Gheeநெய்
39Gingelly oilநல்லெண்ணை
40Gingerஇஞ்சி
41Gingili (seasame seeds)எள்ளு
42Green cardamomபச்சை ஏலம்
43Green chilliபச்சை மிளகாய்
44Ground nut oilகடலையெண்ணை
45Honeyதேன்
46Jaggeryசக்கரை
47Lemonஎழுமிச்சை
48Lemongrassவெட்டிவேர்/எழுமிச்சைப்புல்
49Lemongrass powderவேட்டிவேர் தூள்
50Licoriceஅதிமதுரம்
51Long pepperதிப்பிலி/ கண்டந்திப்பிலி
52Maceசாதிபத்திரி
53Milkபால்
54Mint leavesபுதினா
55Muskகஸ்தூரி
56Mustardகடுகு
57Nigella-seedsகருஞ்சீரகம்
58Nutmegசாதிக்காய்
59Oilஎண்ணை
60Onionவெங்காயம்
61Palm jiggeryபனங்கருப்பட்டி
62Pepperமிளகு
63Phaenilumமணிப்பூண்டு
64Pithecellobium dulce (Madras thorn)கொடுக்காபுளி
65Poppyகசகசா
66Raisinஉலர்திராட்சை
67Red chilliசிகப்பு மிளகாய்
68Rolongகோதுமை நெய்
69Rose waterபன்னீர்
70Saffronகுங்கமம்
71Sagoசவ்வரிசி
72Salad onionசெவ்வெங்காயம்
73Saltஉப்பு
74Sarsaparillaநன்னாரி
75Small chilliசின்ன மிளகாய்
76Small onionசின்ன வெங்காயம்
77Star aniseநட்சித்திரச் சோம்பு
78Sugarசீனி
79Tail pepperவால்மிளகு
80Tamarindபுளி
81Tomatoதக்காளி
82Turmericமஞ்சள்
83Turmeric powderமஞ்சள் தூள்
84Vermicelliசேமியா
85Vinegarகாடி (வினிகர்)
86White onionவெள்ளை வெங்காயம்


குறிப்பு:

1.
Cumin seeds - சீரகம்
Black pepper seeds - கருமிளகு

Cumin seeds, Black pepper seeds போன்ற பெயர்களின் "seeds" எனும் சொல்லும் ஆங்கிலத்தில் பின்னொட்டாக இணைந்து பயன்படுகின்றன. ஆனால் அவற்றை முறையே "சீரக விதைகள், கருமிளகு விதைகள்" எனத் தமிழில் கூறும் வழக்கம் இல்லை. சுருக்கமாக "சீரகம், கருமிளகு" என்று கூறும் வழக்கே உள்ளது. எனவே நானும் அவ்வாறே எழுதியுள்ளேன்.

2.
Cinnamon sticks - கறுவாப்பட்டை/ இலவங்கப்பட்டை

"Cinnamon Sticks" எனும் சொல்லில் "Sticks" எனும் சொல் தடிகள் அல்லது குச்சிகள் என்றே பொருள்படும். ஆனால் தமிழில் "பட்டை" எனும் சொல்லே பின்னொட்டாக புழக்கத்தில் உள்ளது.

3.
Coriander leaves கொத்தமல்லி இலை
Curry leaves கறிவேப்பிலை

Leaf – இலை
Leaves – இலைகள்

மேலுள்ள சொற்களில் “Leaves” எனும் சொல் "இலைகள்" என பன்மையாகவே பயன்படுகிறது. இருப்பினும் அவற்றை "கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை" என ஒருமையில் கூறும் வழக்கே எம் தமிழில் உள்ளது.

4.
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய கேரள மாநிலமான "கொச்சின்" துறைமுகத்தில் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்ட பொழுது, அந்த காயின் பெயர், தமிழரின் பேச்சி வழக்கில் "கொச்சின் + காய் = கொச்சிக்காய்" என அழைக்கும் வழக்கானது எனும் ஒரு கூற்று உள்ளது. இப்போதும் இலங்கையில் சில இடங்களில் மிளகாய் என்பதை "கொச்சிக்காய்" என்று அழைப்போர் உள்ளனர். சிங்களவரிடம் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் எப்படி என்று தெரியாது. தெரிந்தோர் கூறுங்கள்.

தொடர்புடைய இடுகைகள்:

பழங்கள் (List of Fruits)

மரக்கறிகள் (List of Vegetables)

இவ்வட்டணையில் விடுபட்ட கறிச்சுவையூட்டிகளின் பெயர்கள் ஏதும் இருப்பின் பின்னூட்டம் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத் தந்துதவினால் இணைத்து விடுவேன்.

No comments:

Post a Comment